உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சர்ச்சையில் சிக்கிய அதிகாரி | Train test run | controversial officer | Ooty

சர்ச்சையில் சிக்கிய அதிகாரி | Train test run | controversial officer | Ooty

ஊட்டியில் கோடை சீசனையொட்டி வாரம் 4 நாட்கள் இயக்கப்படும் மலை ரயிலை தினமும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து குன்னூர் ரயில் என்ஜின் பணிமனையில் பராமரிப்பு பணிகள் முடிந்த ரயில் என்ஜின் 3 பெட்டிகளுடன் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை சோதனை ஓட்டமாக பணிமனை சீனியர் செக்ஷன் இன்ஜினியர் சுப்ரமணியம் தலைமையில் இயக்கப்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட தனது குடும்பத்தினரை அதிகாரி அழைத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில், ரயில் சோதனை ஓட்டத்தில் பயணிகளளை அழைத்து செல்லக்கூடாது என்ற விதி இருந்தும், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரண்பாடாக இந்த சோதனை ஓட்டத்தில் தனது குடும்பத்தை அதிகாரி அழைத்து சென்றுள்ளார். உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மே 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி