கோவை புத்தக கண்காட்சியில் திருநர்களின் படைப்புகள்
கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் திருநங்கைகள் பதிப்பகம் சார்பில் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. திருநர்கள் எழுதிய புத்தகங்கள் இந்த ஸ்டாலில் வைக்கப்பட்டுள்ளன. திருநர்களின் வாழ்வியல் முறைகள் பற்றி திருநர்கள் எழுதிய கவிதைகள், உரைநடைகள் கொண்ட புத்தகங்கள் உள்ளன. வெளிநாட்டு திருநர்களின் புத்தகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய புத்தகங்களை அனைவரும் படித்தால் தான் திருநர்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ள முடியும். கோவையில் அமைக்கப்பட்டுள்ள திருநங்கை பதிப்பகம் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 24, 2025