நாங்களும் பிரியாணி சமைப்போம் களத்தில் இறங்கிய பழங்குடிகள்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் குரும்பர், காட்டு நாயக்கர், பனியர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வனங்களில் கிடைக்கும் மூலிகை குணம் கொண்ட கிழங்குகள் மற்றும் கீரைகள் அத்துடன் வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் போன்றவற்றை உணவுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அதனால் இவர்கள் உடல் திறன் மிக்கவர்களாகவும், விளையாட்டு மற்றும் விவசாயம் சார்ந்த புதிய தகவல்களை தெரிந்து கொள்ளும் திறன் மிக்கவர்களாகவும் உள்ளனர். இவர்களின் வேலை வாய்ப்புகளும் படிப்படியாக உயர்வான நிலைக்கு சென்று கொண்டு உள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு முதல்முறையாக பிரியாணி சமைப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. கனரா வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ், காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த 23 பேர் தேர்வு செய்யப்பட்டு, இவர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்பட்டது. அது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.