வீடு கட்டும் பணியை நிறுத்தியதால் பழங்குடியினர் பரிதவிப்பு | Pity the Tribals
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டில், அமைந்துள்ளது ஓர்கடவு கிராமம். இங்கு பனியர் சமுதாயப் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களின் வீடுகள் பாழடைந்து இடிந்து விழுந்து வருவதால் புதிய வீடுகள் கட்டித் தர வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி சார்பில் முதல்கட்டமாக ஐந்து பேருக்கு புதிய தொகுப்பு வீடுகள் கட்டும் பணி துவக்கப்பட்டது. இதற்காக அவர்கள் ஏற்கனவே குடியிருந்த குடிசைகள் இடித்து அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக புதிய வீடு கட்ட இடம் ஒதுக்கி கொடுத்தனர். ஆனால் வீடு கட்டும் பணி தொடங்கி மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை முழுமை பெறவில்லை. குடியிருந்த குடிசையும் இடித்துவிட்டு தற்போது குடியிருக்கு குடிசை கூட இடமில்லாமல் பழங்குடி மக்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.