உக்கடம் 'பிளைன்ட் ஸ்பாட்' தீர்வு தான் என்ன?
கோவை உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு வழியாக செல்லும் பேருந்துகள் சுங்கம் புறவழிச் சாலையாக வருகின்றன. இவ்வாறு வெளியே வரும் பேருந்துகளும், செல்வபுரம் புறவழிச் சாலை, டவுன்ஹால் மற்றும் ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக வரும் வாகனங்களும், சுங்கம் புறவழிச்சாலையாக செல்லும் வாகனங்களும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் பேருந்து சரிவர தெரியாத பிளைன்ட் ஸ்பாட் ஆக உள்ளது. இந்த கண்ணுக்கு புலப்படாத பகுதியால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வாகன விபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இடம் உள்ளது. எனவே இங்கு உரிய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.