/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தினமலர் செய்தி எதிரொலி! சுகாதாரமற்ற உணவுகள் சுத்தமானது! Dinamalar Impact | Coimbatore
தினமலர் செய்தி எதிரொலி! சுகாதாரமற்ற உணவுகள் சுத்தமானது! Dinamalar Impact | Coimbatore
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே தினமலர் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்கப்படுவது பற்றி செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக நமது அலுவலகத்துக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. போனில் பேசியவர்கள் தற்போது சுகாதாரமான முறையில் உணவு பொருட்கள் விற்கப்படுவதாகவும், அதற்காக தினமலருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் நமது செய்தியின் ஆக்சனுக்கு ரியாக்சன் எப்படி இருக்கிறது, உணவு பொருட்கள் எப்படி பாதுகாப்பாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரித்து விற்கப்படுகிறது என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 28, 2024