/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ துரித உணவுகளா? துயர உணவுகளா? சுகாதாரமின்றி விற்பனையாகும் உணவுகள்
துரித உணவுகளா? துயர உணவுகளா? சுகாதாரமின்றி விற்பனையாகும் உணவுகள்
கோவையில் மக்கள் கூடும் பெரும்பாலான இடங்களில் சுகாதாரமற்ற முறையில், துரித உணவுகள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. என்னதான் வீட்டில் வகை வகையாக சமைத்தாலும், ஒரு வேளையாவது துரித உணவுகளை சுவைக்காவிடில், நாக்கு நமநமன்னு ஆகி விடுகிறது. அந்தளவுக்கு நம் வாழ்வியலில் துரித உணவுகள் கலந்து விட்டன. பல பேக்கரிக்களில் சுகாதாரம் என்பது மருந்துக்கு கூட இல்லாத நிலையே உள்ளது. பேக்கரிகளில், உணவுகளை திறந்து வைத்திருப்பது, ஈ மொய்த்துக் கொண்டிருப்பது என, சுகாதாரம் என்ன விலை என்று கேட்கும் அளவுக்குத்தான் உள்ளது. கோவையில் துரித உணவுகள் எந்த அளவுக்கு சுகாதாரமற்ற நிலையில் விற்கப்படுகின்றன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 23, 2024