யு டேர்ன் போட்டாங்க... பாதசாரிகளை தடுமாற விட்டாங்க...
கோவை அவினாசி சாலையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருவதால், அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக சிக்னல்கள் அகற்றப்பட்டு யு டேர்ன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இந்த முறை வாயிலாக போக்குவரத்து சீரானது. ஆனால் அதன்பின்னர் சிக்னல்கள் இல்லாததால் வாகனங்கள் அதி வேகமாக வரத் தொடங்கின. இதனால் பாதசாரிகள் சாலையை கடப்பதில் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறார்கள். யு டேர்ன் முறையினால் ஒரு பக்கம் நன்மை என்றாலும், மற்றொரு பக்கம் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. யு டேர்ன் முறையினால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 07, 2024