கோவை வாழைக்காய் மார்க்கெட்டுக்கு இவ்வளவு மவுசா!
கோவை ஆர்.எஸ்.புரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வாழைத்தார் மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 250 வியாபாரிகள் வருகிறார்கள். தினமும் 5 ஆயிரம் வாழைத் தார்கள் விற்பனைக்கு வருகின்றன. தமிழகத்தில் எங்கெல்லாம் வாழைத்தார்கள் விளைகிறதோ அத்தனை ஊர் காய்களும் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து வெளியூர்களுக்கும் வாழைத்தார்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கோவையில் செயல்படும் வாழைத்தார் மண்டி செயல்பாடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 10, 2024