உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் வழிகாட்டியால் தெளிவு கிடைத்தது... கோவையில் மாணவர்கள் நெகிழ்ச்சி | Dinamalar

தினமலர் வழிகாட்டியால் தெளிவு கிடைத்தது... கோவையில் மாணவர்கள் நெகிழ்ச்சி | Dinamalar

தினமலர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமங்கள் இணைந்து நடத்திய தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் 3 நாட்கள் நடந்தது. பிளஸ் 2 படிப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற கேள்விகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது கண்காட்சி மற்றும் கருத்தரங்கு என்ற இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. 130 முன்னணி கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் இங்கு அமைக்கப்பட்டிருந்தன. வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்த மாணவ-மாணவியர்கள் அந்தந்த ஸ்டால்களுக்கு சென்று கல்லுாரி படிப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். மேலும் கருத்தரங்கில் பேசியவர்களின் ஆலோசனைகளும் அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பத்துக்கு விடை அளிப்பதாக இருந்தது. கோவையில் 3 நாட்கள் நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு கல்லுாரி படிப்பில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர். அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

மார் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை