உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 16 ஆயிரம் பெண்கள் ஒருங்கிணைந்து வள்ளிகும்மியாட்டம் ஆடி உலக சாதனை|Coimbatore |Vallikummiattam

16 ஆயிரம் பெண்கள் ஒருங்கிணைந்து வள்ளிகும்மியாட்டம் ஆடி உலக சாதனை|Coimbatore |Vallikummiattam

16 ஆயிரம் பெண்கள் ஒருங்கிணைந்து வள்ளிகும்மியாட்டம் ஆடி உலக சாதனை / Coimbatore | Vallikummiattam | Guinness record try வள்ளி கும்மியாட்டத்தை உலகம் முழுவதும் பறைசாற்றும் விதமாக ஈரோட்டில் நடந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டில் வள்ளிகும்மியாட்ட பெண் கலைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். கின்னஸ் வேர்ல்ட் ரிக்கார்டில் இடம் பெறும் வகையில் பெண் கலைஞர்கள் 16 ஆயிரம் பேர் சந்தனம், சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் ஒரே சீருடை அணிந்து பங்கேற்றனர். முருகன் திருமணத்தை மையப்படுத்தி கும்மியாட்டக்கலை ஆசிரியர்கள் பாடும் நாட்டுப்புற பாடலுக்கு ஏற்ப வள்ளிக்கும்மியாட்டத்தை 16 ஆயிரம் பெண்கள் ஒன்றரை மணி நேரம் இடைவிடாமல் தொடர்ச்சியாகவும், நேர்த்தியாகவும், தத்ரூபமாகவும் ஆடி அசத்தினர். இதை கின்னஸ் வேர்ல்ட் ரிக்கார்ட் நிர்வாகி ஜார்ஜ் தலைமையிலான குழு பார்வையிட்டு அங்கீாரம் வழங்கியது. அதற்கான சான்றிதழை வள்ளிக்கும்மியாட்ட நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. நாட்டுப்புற கலைகளில் ஒன்றான வள்ளிகும்மியாட்டத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பெண் கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் வலியுறுத்தினர்.

பிப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ