உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கட்சிப் பதவியில் இருந்து நீக்கியது கண்துடைப்பு நாடகம்

கட்சிப் பதவியில் இருந்து நீக்கியது கண்துடைப்பு நாடகம்

கட்சிப் பதவியில் இருந்து நீக்கியது கண்துடைப்பு நாடகம் / Coimbatore / Dismiss Ponmudi from the post of Minister / Vanathi Srinivasan / bjp / dmk பெண்களையும், ஹிந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாக மிகவும் அருவருக்கத்தக்கதாக, தரம் தாழ்ந்தும் விமர்சனம் செய்த அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவியை பறித்தது வெறும் கண் துடைப்பு நாடகம். அவரை பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி எம்எல்ஏ வலியுறுத்தினார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விழுப்புரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், வன அமைச்சருமான பொன்முடி, விலைமாதர் வாடிக்கையாளர் இடையே நடந்த உரையாடலை, ஹிந்து மதத்தின் சைவ, வைணவத்தின் புனிதச் சின்னங்களுடன் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்க வகையில் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது. அமைச்சர் பொன்முடி வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மிக கேவலமாகப் பேசியுள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. தரம் தாழ்ந்து பேசிய பொன்முடி, எந்தப் பதவி வகிக்கவும் தகுதி அற்றவர். அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமல், திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து மட்டும் நீக்கி, தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். பொன்முடியை வனத்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி பேசியது குறித்து முதல்வர் உண்மையிலேயே வருத்தப்பட்டால் அவரை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும். பெண்களையும், ஹிந்து மதத்தையும் அவமானப்படுத்திய அமைச்சர் பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிப் பதவியிலிருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது என தனது அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை