உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்பியிடம் புகார் கூறிய ஏஎஸ்பி; விசிக நிர்வாகியை தட்டித் துாக்கியது போலீஸ்

எஸ்பியிடம் புகார் கூறிய ஏஎஸ்பி; விசிக நிர்வாகியை தட்டித் துாக்கியது போலீஸ்

எஸ்பியிடம் புகார் கூறிய ஏஎஸ்பி; விசிக நிர்வாகியை தட்டித் துாக்கியது போலீஸ் | vck district secretary arrested | Kovai கோவை வடக்கிபாளையம் பகுதியில் கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் வகையில் இருந்த பேனர் முறையான அனுமதி பெற்றதாக தெரியவில்லை. இரண்டு நாளுக்கு மேலாகியும் பேனர் அகற்றப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து விசிக தெற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், பொள்ளாச்சி ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங்கிடம் போனில் புகார் அளித்தார். நாங்கள் பேனர் வைத்தால் உடனே அகற்றி விடுகிறீர்கள் ஆனால் இதற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள் எனக்கேட்டு ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங்கை தகாத வார்த்தையில் திட்டி மிரட்டினார். அசோக்குமார் மீது கோவை போலீஸ் எஸ்பி கார்த்திகேயனிடம், ஏ.எஸ்.பி., புகார் கூறினார். எஸ்பி உத்தரவுப்படி அசோக்குமாரிடம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மீது ஆபாசமாக பேசுதல், பெண்ணை இழிவு படுத்தி பேசுதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை