உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கிணற்று நீர் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி | Increase in vegetable prices

கிணற்று நீர் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி | Increase in vegetable prices

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக் குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் கிணற்றுப் பாசன விளை நிலங்களில் பந்தல் அமைத்து, பாகற்காய், புடலை, பீர்க்கன் உள்ளிட்ட காய்கறி சாகுபடி நடக்கிறது. வழக்கமாக கோடைக் காலத்தில் கிணற்றுப் பாசன முறையில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். இதை சமாளிக்கும் வகையில் குறைந்த தண்ணீர் தேவையுள்ள புடலையை அதிகளவு சாகுபடி செய்கின்றனர். பந்தல் காயகறி.களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, கேரள வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கு வந்து காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர். இதனால் இடைத் தரகர் தொல்லை இல்லை. சந்தைப்படுத்துவது சுலபம், நிலையான விலை, கைமேல் காசு என சலுகைகள் உடனுக்குடன் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை