உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குழிதட்டு முறையில் காய்கறி நாற்றுகள் வளர்ப்பு | Green Hut seed Nursery | Udumalpet

குழிதட்டு முறையில் காய்கறி நாற்றுகள் வளர்ப்பு | Green Hut seed Nursery | Udumalpet

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பசுமை குடில் மூலம் விவசாயம் நடக்கிறது. வருடம் முழுவதும் காய்கறிகள், காளான் வளர்ப்பு மற்றும் நாற்று உற்பத்தி செய்து சம்பாதிக்கின்றனர். விளை பொருட்கள் மட்டுமல்லாமல் எதையும் உயர்த்திட தரமான தொழில்நுட்பம் தேவை. அப்படிப்பட்ட தொழில்நுட்பங்களில் ஒன்று தான் பசுமை கூடார விவசாயம். 90 முதல் 95% பயிர்கள் வயல்வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. இதை வருடம் முழுவதும் வளர்க்க முடியாது. ஆனால் பசுமைக் கூடாரம் அமைத்தால் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய இயலும். குளிர்பிரதேசங்களில் அதிகப்படியான குளிரில் இருந்து பயிர்களை தொடர்ந்து காப்பாற்றி, உயர் மதிப்புள்ள பயிர்களை வளர்க்க பசுமைக் கூடார தொழில்நுட்ப முறைகள் உருவாக்கப்பட்டன. காற்று, குளிர், மழை, அதிக சூரிய ஒளி, அதிக வெப்பம், பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. பசுமைக் கூடாரம் என்பது ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் போர்த்தப்பட்ட அமைப்பாகும். இதனுள் தேவையான தட்பவெப்ப நிலை உருவாவதுடன், இரவில் வெளியிடும் கரியமில வாயு உள்ளேயே தங்கி, ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது. விளைச்சல் அதிகமாகிறது. ஈரப்பதம் குறையாது. அதிகநீர் தேவைப்படுவதில்லை. பூச்சி, எலி, பறவைகளின் தாக்குதல் இல்லை. வெப்பம், பெரும் மழை, காற்று தடுக்கப்படும். பூச்சி மருந்து மற்றும் உரங்களின் சரியான பயன்பாடு சாத்தியமாகும். தட்பவெப்பம் கட்டுப்படுவதால் வருடம் முழுவதும் எந்த பயிரையும் பயிர் செய்யலாம். ஆண்டு முழுவதும் காய்கறிகள், கொய்மலர்கள் கிடைப்பதால் லாபம் அதிகமாகிறது. பசுமைக் கூடாரம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடுமலை அருகே கண்டியகவுண்டன்புதுார் எஸ்.வி. மில்ஸ் பகுதியில் சந்தோஷ் என்பவர் பசுமைக்குடில் நாற்றுப் பண்ணையை நிறுவியுள்ளாார். இங்கு தக்காளி, பப்பாளி, கத்திரி, மிளகாய், சின்ன வெங்காயம், காளிபிளவர் உள்ளிட்ட தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்கிறார்.

மே 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை