இது என்ன காட்சி பொருளா? எப்ப தான் வரும்!
கோவை வெள்ளக்கிணறு பிரிவு சவுடாம்பிகை நகரில் போதுமான தண்ணீர் வசதி இல்லை என்ற கூறப்படுகிறது. இங்கு விடப்படும் தண்ணீர் அளவும், நேரமும் குறைந்து விட்டது. இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி கட்டி 4 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். காட்சி பொருளான குடிநீர் தொட்டியை விரைவில் திறக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 08, 2024