ஏழு மலையேறி ஒரு உயிரை காக்குற த்ரில் இருக்கே... நிஜ கழுகுகள் நாங்கள்
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோயில் உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த மலைக்கோவிலுக்கு செல்ல பிப்ரவரி முதல் மே மாதம் வரை மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த சூழலில், மலையேறி செல்பவர்களுக்கு திடீர் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ! அல்லது தவறி கீழே விழுந்து அடிபட்டாலோ! அவர்கள் மருத்துவ வசதி பெற மலையின் அடிவாரம் தான் வர வேண்டும். அந்தவகையில், மூச்சுத்திணறல், மாரடைப்பு மற்றும் தவறி கீழே விழுந்தது என இந்தாண்டில் மட்டும் ஒன்பது பேர் மரணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டுவது யார் தெரியமா...!டோலி சுமப்பவர்கள்தான். இவர்களை பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.