/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ திறக்கப்பட்டது வெள்ளியங்கிரி மலை | பக்தர்களுக்காக தயாராகும் கடைகள்
திறக்கப்பட்டது வெள்ளியங்கிரி மலை | பக்தர்களுக்காக தயாராகும் கடைகள்
கோவை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள வெள்ளியங்கிரி மலையில், ஈசனை, பக்தர்கள் தரிசிக்க பிப்., 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை, பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மலையில் பக்தர்களுக்காக திறக்கப்படும் கடைகள் நான்கு மாதங்கள் மட்டுமே செயல்படும். இவை மலைவாழ் மக்களால் நடத்தப்படும் கடைகளாகும். மலை ஏறும் பக்தர்களுக்கு தேவைப்படும் தின்பண்டங்கள், குடிநீர், டீ, தண்ணீர், பழங்கள் என மலை ஏறும் போது தேவைப்படும் உணவுகள் மட்டுமே இங்கு விற்கப்படுகின்றன. இந்த கடைகளுக்கு தேவையான பொருட்களை கொண்டுவந்து கொடுக்கவும் மலைவாழ் மக்கள் வேலை செய்து வருகின்றனர். மலை ஏறி விற்பனை செய்வது மற்றும் அந்த பொருட்களை சுமந்து செல்வது எவ்வளவு கடினம் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
பிப் 07, 2026