/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை சென்ட்ரல் ஜெயிலில் லைப்ரரி திறப்பு | Coimbatore | Prisoners | Video call facility
கோவை சென்ட்ரல் ஜெயிலில் லைப்ரரி திறப்பு | Coimbatore | Prisoners | Video call facility
கோவை சென்ட்ரல் ஜெயலில் கைதிகள் வெளி நபர்களிடம் பேசும் வீடியோ கால் வசதியை சட்ட அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். மேலும் சிறை வளாகத்தில் 2 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிறை நுாலகத்தை திறந்து வைத்து 9 கைதிகளுக்கு சுய தொழில் முனைவோருக்கான சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் சிறை டிஜிபி மகேஷ்வர் தயாள், டிஐஜி சண்முகசுந்தரம், எஸ்பி செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கைதிகள் வீடியோ கால் வசதியை பயன்படுத்தி 3 நாட்களுக்கு ஒரு முறை தலா 12 நிமிடங்கள் என மாதம் 10 முறை பேச சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியது.
டிச 05, 2024