ஆந்திர மாநிலத்தில் ஜூலை 9ம் தேதி தேசிய அளவிலான போட்டி நடைபெறும்
ஆந்திர மாநிலத்தில் ஜூலை 9ம் தேதி தேசிய அளவிலான போட்டி நடைபெறும்/ Physically challenged volleyball State level tournament/covai கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டனர். நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி முதலிடம் வென்றது. கோவை மற்றும் திருப்பூர் அணி இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை, சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகள், ஜூலை ஒன்பதாம் தேதி, ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர்.