உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை கட்டடங்களில் சிங்கப்பூர் ஆர்ட்டிஸ்டின் சிந்திக்க வைக்கும் ஓவியங்கள்

கோவை கட்டடங்களில் சிங்கப்பூர் ஆர்ட்டிஸ்டின் சிந்திக்க வைக்கும் ஓவியங்கள்

கோவையில் கடந்த சில ஆண்டுகளாக உயரமான கட்டடங்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மிகவும் தத்ருபமாக நாம் இதற்கு முன்பு பார்த்திராத அளவுக்கு மிகவும் பெரிய அளவில் வரையப்படும் ஓவியங்கள் பார்ப்பவர்களை பிரமாண்டம் அடையச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் பெரிய ஓவியம் அந்த கட்டடத்துக்கு அழகையும் கொடுக்கிறது. இதற்காக கோவையை சேர்ந்த ராக் என்ற அமைப்பு வெளிநாடுகளிலிருந்து ஓவியர்களை ஒரு தன்னார்வ அமைப்பின் வாயிலாக வரவழைத்து வரைந்து வருகிறது. தற்போது உக்கடம் புல்லுக்காடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி வீடுகளின் சுவர்களின் சிங்கப்பூர் ஆர்ட்டிஸ்ட் ஓவியங்களை வரைந்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள வாழ்வியல் சூழல்களின் அடிப்படையில் சிந்திக்க வைக்கும் வகையில் இந்த பிரமாண்ட ஓவியங்கள் வரையப்படுகின்றன. உதாரணத்துக்கு சிங்கப்பூர் ஆர்ட்டிஸ்ட் அந்த பகுதியில் ஒரு டீக்கடையில் மாஸ்டர் ஒருவர் டீ போடுவதை பார்த்து அதை அப்படியே கட்டடங்களில் வரைந்துள்ளது பொதுமக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

பிப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை