/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தொட்டி கட்டி 9 ஆண்டுகள்… இன்னும் தண்ணீருக்காக காத்திருக்கும் கிராமம்!
தொட்டி கட்டி 9 ஆண்டுகள்… இன்னும் தண்ணீருக்காக காத்திருக்கும் கிராமம்!
கோவை, அக்ரஹார சாமக்குளம் கிராமத்தில், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 2017-18ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பல ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கிறது. குடிநீருக்காக மக்கள் தவிக்கும் நிலையில், பல ஆண்டுகளாக அரசு நிதியில் கட்டப்பட்ட தொட்டி பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “தொட்டி கட்டியது எதற்காக? தண்ணீர் எப்போது வரும்?” என பொதுமக்கள் எழுப்பும் கேள்விகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 25, 2026