தமிழக ஆசிரியர்கள் ₹6.50 லட்சம் உதவி | Wayanad Landslide | ₹6.50 Lakh in aid
கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் மண்ணில் உயிருடன் புதைந்தனர். பலரை காணவில்லை. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர் நிலச்சரிவில் பலியானார்கள். இவர்களின் குடும்பத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த பலரும் உதவி செய்து வருகின்றனர். இதில் கூடலூர், பந்தலூர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இணைந்து 6 வட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உதவி செய்தனர். இதில் வயநாடு மாவட்ட நிர்வாகத்திடம் 3 லட்சம் ரூபாய் வழங்கினர். சூரல்மலை மற்றும் முண்டைக்கை பகுதியில் சிக்கி பலியான நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி அனந்திகா, காளிதாஸ், கல்யாணகுமார் மற்றும் சிகாபுதீன் ஆகியோர் குடும்பங்களுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய் வழங்கினர். நாடுகாணி பொன்னூர் பகுதியைச் சேர்ந்த விஜயேந்திரன் சூரல்மலையில் வசித்து வந்தார். நிலச்சரிவில் அவரது வீடு சேதமடைந்தது. அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.