கைத்தறி நெசவாளர்களின் கண்ணீர் கதை
தற்போது பட்டு நுால் விலை உயர்ந்து விட்டதால் கைத்தறி நெசவாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்களில் சிலர் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றுகிறார்கள். ஆனால், நுாற்றுக்கு 70 சதவீதம் பேர் தனியாகத் தான் நுால் வாங்கி நெய்கிறார்கள். இதனால் சரியாக பாவு நுால் கொடுப்பதில்லை, கூலியும் சரியாக கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. கேரளாவுக்கு சென்று நுால் வாங்கி வந்து நெய்வதாகவும் கைத்தறி நெசவாளர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரும் கைத்தறி நெசவாளர்கள் தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கைத்தறி நெசவாளர்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 06, 2024