மூன்று வேலை செய்றேன்... நாலு மொழி பேசுவேன்! மேல படிக்க ஆசை; வசதி தான் இல்ல
கோவை ஆர். எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் சையம் இஸ்லம் மோண்டல் குடும்ப ஏழ்மை காரணமாக வேலை செய்து கொண்டே படிக்கிறார். காலை 4 மணி முதல் 6 மணி வரை 150 வீடுகளுக்கு சென்று செய்தித்தாள் போடுகிறார். பின்னர் 6 மணி முதல் 8 மணி வரை 10 வீட்டில் உள்ளவர்களுக்கு காலை உணவு வாங்கி கொடுக்கிறார். அதன் பிறகு தான் பள்ளிக்கு செல்கிறார். பள்ளி முடிந்து 4 மணிக்கு வீடு திரும்பும் அவர் இரவு 11 மணி வரை நகை பட்டறையில் டிசைனிங் செய்யும் வேலை செய்கிறார். தினமும் மூன்று வேலை செய்வதின் வாயிலாக கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு படிப்பு செலவு மற்றும் குடும்ப பாரத்தையும் சுமக்கிறார்.உயர் கல்வி படிக்க நினைக்கும் அவருக்கு யாராவது உதவிக் கரம் நீட்டுவார்களா என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.