இந்தியா அமெரிக்கா இடையே கலாசார புரிதலை ஏற்படுத்தும் முயற்சி
இந்தியா அமெரிக்கா இடையே கலாசார புரிதலை ஏற்படுத்தும் முயற்சி /Coimbatore / Wheelchair Basketball Players Training Begins இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் வீல்சேர் கூடைப்பந்து வீரர்களின் பயிற்சி கே.சி.டி கல்வி நிறுவனத்தில் தொடங்கியது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே விளையாட்டு மற்றும் பன்முக கலாசார புரிதலை ஏற்படுத்தும் விதமாக இரு நாடுகளின் வீல்சேர் கூடைப்பந்து வீரர்களிடையேயான பயிற்சி நடக்கிறது. இங்கு ஆகஸ்ட் 10ம் தேதி வரை விளையாட்டு திறன்களை மேம்படுத்துதல், கலாசார உறவுகளை உருவாக்குவது போன்ற நோக்கத்துடன் பயிற்சி வழங்கப்படுகிறது. அமெரிக்க பல்கலையை சேர்ந்த, 15 வீரர்களும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த, 15 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஆக 01, 2025