உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக தென்னை விவசாயிகள் கண்ணீர் | White flies infection| coconut trees | Farmer issue | Palladam

தமிழக தென்னை விவசாயிகள் கண்ணீர் | White flies infection| coconut trees | Farmer issue | Palladam

தமிழக தென்னை விவசாயிகள் கண்ணீர் | White flies infection| coconut trees | Farmer issue | Palladam சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் தென்னை மரங்களில் ரூகோஸ் எனப்படும் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. முதன் முதலில் கேரளாவில் கண்டறியப்பட்ட இந்த நோய் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் வேகமாக பரவியது. வெள்ளை நிற ஈக்கள், தென்னை இலைகளுக்கு பின்புறம் சுருள் வடிவத்தில் முட்டையிடும். இவற்றின் மீது வெள்ளை நிற மெழுகு இருப்பதால் பார்ப்பதற்கு வெள்ளை நிற நூலாம்படை போன்றிருக்கும். ஈக்கள் இனிப்பான திரவம் போன்ற கழிவை வெளியேற்றுகின்றன. கழிவின் மீது பூஞ்சாணம் வளர்வதால் இலைகள் கருப்பு நிறமாகி ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுகிறது. வெள்ளை நிற ஈக்கள், குஞ்சுகள், இலைகளுக்கு பின்னால் இருந்து சாறு உறியத் துவங்கும். இதனால் தென்னை பச்சையத்தை இழந்து உயிர் வாழ முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மடியும். நாளடைவில் பட்டுப்போய் சாய்ந்து தனது ஆயுளை முடித்து கொள்ளும் தென்னையை முற்றிலும் அழிக்கும் வெள்ளை ஈ நோய் கேரளாவில் துவங்கி கர்நாடகாவில் முழு வேகம் காட்டியது. எனினும் கேரள மற்றும் கர்நாடக வேளாண் துறையினர் வெள்ளை ஈக்களை அழித்து தென்னையை காத்தனர். அளவுக்கு மீறிய வெள்ளை ஈ தாக்குதல் காணப்படும்போது மரங்களை அப்புறப்படுத்துவது மட்டுமே ஒரே தீர்வு. ஒரு ஏக்கர் தென்னை மரங்களை அகற்ற சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். தென்னை மரங்களை மறு நடவு செய்ய ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும் என விவசாயிகள் தெரிவித்தனர். கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் வெள்ளை ஈ நோய் தாக்குதல் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவும் வெள்ளை ஈ தாக்குதலை ஒழித்து விவசாயிகள் வயிற்றில் வேளாண் துறை பால் வார்க்க வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தினர். குறிப்பு: செய்தி துவங்கும் போது; கடைசி பைட் முடிந்த பின் தலா 10 செக்கன்ட்ஸ் வெள்ளை ஈ தாக்கிய தென்னை மரங்களை காட்டவும்

ஏப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ