தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
கோவை மாவட்டத்தில் பல இடங்களில் தென்னையை வெள்ளை ஈக்கள் தாக்குகிறது. அதிலும் தென்னையில் ஒட்டு ரகங்களில் வெள்ளை ஈக்கள் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. நெட்டை மரங்களில் இந்த தாக்குதல் இல்லை. பச்சையம் அதிகமாக உள்ள குட்டை தென்னை மரங்களில் இவற்றின் தாக்குதல் தீவிரமாக உள்ளது. இதை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம். உயிர் கொல்லி முறையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது நல்லது. ரசாயன உரங்களை பயன்படுத்தினால் வெள்ளை ஈக்களின் வீரியம் அதிகமாகும். அதனால் தான் உயிர் கொல்லி முறை பயன்படுத்தப்படுகிறது. தென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 25, 2025