தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகள் | Wild animals looking for food and water | Gudalur
நீலகிரி மாவட்டம் முதுமலையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது, வனவிலங்குகள் குறிப்பாக யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தண்ணீர், உணவு தேடி யானைகள் இரவில் முதுமலையை ஒட்டிய குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. முதுமலை காரைக்குடி வனப்பகுதியில் இருந்து அகழியை கடந்து தொரப்பள்ளி நகரில் நுழைந்த மக்னா யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்தது. வியாபாரிகள், டிரைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. தொடர்ந்து சாலையோரம் குப்பையில் கிடந்த உணவுகளை உண்டது. அப்பகுதி சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராது யானை அருகே சென்று செல்போனில் வீடியோ எடுத்து இடையூறு ஏற்படுத்தினர். அங்கு வந்த வனத்துறையினர் அலாரம் ஒலிக்கச் செய்து யானையை வனத்திற்குள் விரட்டினார். அப்பகுதியினர் கூறுகையில், முதுமலையில் இருந்து காட்டு யானைகள் இப்பகுதிக்கு நுழைவதை தடுக்க அகழி அமைத்துள்ளனர். பராமரிப்பு இல்லாததால் யானைகள் இரவில் அகழியை கடந்து ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.