உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 140 பேர் குழு அசத்தல் வெற்றி | Wild Elephant captured | Human Wildlife conflict| Gudalur

140 பேர் குழு அசத்தல் வெற்றி | Wild Elephant captured | Human Wildlife conflict| Gudalur

140 பேர் குழு அசத்தல் வெற்றி / Wild Elephant captured / Human Wildlife conflict/ Gudalur ஊட்டி கூடலூர் ஓவேலி பகுதியில, பெரிய தந்தந்தோட, பார்க்வே பிரம்மாண்டமா, கம்பீர சிங்க நடை போட்டு சுத்துற காட்டு யானை தான் ராதாகிருஷ்ணன். இது வர நடந்த வெவ்வேறு சம்பவங்கள்ல, ராதா கிருஷ்ணன் 12 பேர காவு வாங்கிட்டான். கடைசியா இந்த வருஷம் ஆகஸ்ட் 11ம் தேதி new hope பகுதிய சேர்ந்த மணிங்குறவர ராதாகிருஷ்ணன் பந்தாடி கொன்னுட்டான். மனுஷங்கள பாத்தாலே ஆக்ரோஷமா துரத்தி தாக்கிக் கொல்லுற இந்த காட்டு யானைய பிடிக்கனும்னு மக்கள் சாலை மறியல் செஞ்சாங்க . இந்நிலையில ராதா கிருஷ்ணன பிடிச்சு வேற வனப்பகுதியில விடனும்னு நெருக்கடி அதிகரிச்சிருச்சு. அதுக்கான ஆர்டர தமிழக முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா கடந்த செப்டம்பர் 15ம் தேதி கொடுத்தாரு. அத தொடர்ந்து செப்டம்பர் 16ம் தேதி கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில ஒரு பெரிய படை களத்துல இறங்கினாங்க. 105 ஃபாரஸ்ட் ஊழியருங்க, யானை பாகனுங்க, போலீசார்னு மொத்தம் 140 பேர், யானைய பிடிக்க அலர்ட் ஆயிட்டாங்க. அதுமட்டுமில்லாம வசிம், விஜய், சீனிவாசன், பொம்மன்னு முதுமலைய சேர்ந்த 4 கும்கி யானைங்க கொண்டுவரப்பட்டுச்சு. ட்ரோன் கேமரா வச்சு ராதாகிருஷ்ணன் இருப்பிடத்தை ஆபீஸர்ஸ் தொடர்ந்து கண்காணிச்சாங்க . அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், இரண்டு ஜே.சி.பி., மற்றும் கிரேன் எல்லாமே ரெடியா இருந்துச்சு. இதுக்கு நடுவுல ராதா கிருஷ்ணன பிடிச்சதும், அத அடைக்க ஒரு மெகா சைஸ் கூண்டு தயாராச்சு. Eucalyptus மரத்த வெட்டி கும்கி யானைங்க உதவியோட கூண்டு தயாரிக்கப்பட்டுச்சு. Breath எல்லாம் ரெடியா இருந்த நிலையில, ஃபாரஸ்ட் ஆபிஸர்ஸ் ராதாகிருஷ்ணன விரட்டி , ஒரு பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிட்டு வந்தாங்க. அத தொடர்ந்து, பரண் மேல இருந்து, வெட்டினரி டாக்டர்ஸ் ராதாகிருஷ்ணனுக்கு மயக்க ஊசி போட்டாங்க. கொஞ்ச நேரத்துல ராதா கிருஷ்ணன் புதருக்குள்ள பதுங்கிட்டான். உடனே கும்கி யானைய வச்சு ராதாகிருஷ்ணன துரத்தி, டாக்டர்ஸ் மறுபடியும் ஒரு மயக்க ஊசி போட்டாங்க. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா, ராதாகிருஷ்ணன ஆபீஸர்ஸ் அவங்க கட்டுப்பாட்டுல கொண்டு வந்தாங்க. ராதாகிருஷ்ணன் அசந்த கொஞ்ச நேரத்துளயே, யானை பாகன் கிருமாறன், ராதாகிருஷ்ணன் மேல ஏறி, அது கழுத்துல கயிறு கட்டினாரு. கும்கி யானைங்க உதவியோட ராதாகிருஷ்ணன லாரில ஏத்தி முதுமலை அபயாரணம் யானைகள் முகாமுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அங்க ரெடியா இருந்த மர கூண்டுல ராதாகிருஷ்ணன அடச்சிட்டாங்க. நள்ளிரவுல running, chasing, catchingனு காட்டுப்பகுதியே பரபரப்பாகிடுச்சு. Byt - use all the visuals வெங்கடேஷ் பிரபு வன அலுவலர் ஒரு ரண்டு வாரம் ராதாகிருஷ்ணன முகாம்ல வச்சு சாந்தப்படுத்திட்டு, அதுக்கு அப்புறம் ராதாகிருஷ்ணன அடர்ந்த காட்டுப்பகுதிக்குள்ள விடனும்னு ஃபாரஸ்ட் ஆபிஸர்ஸ் முடிவு பண்ணிருக்காங்க. ராதாகிருஷ்ணன் பிடிபட்டதுனால அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுருக்காங்க. ராப்பகலா கஷ்டபட்டு ராதாகிருஷ்ணன பிடிச்ச மொத்த டீமுக்கும் பொதுமக்கள் சந்தோஷமா சபாஷ் போட்டாங்க.

செப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை