உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எட்டு அடி உயர டவரில் ஏறி உலக சாதனை படைத்த இளம் யோகா சிறுவர், சிறுமியர் | Yoga Achivement | Covai

எட்டு அடி உயர டவரில் ஏறி உலக சாதனை படைத்த இளம் யோகா சிறுவர், சிறுமியர் | Yoga Achivement | Covai

டிஸ்க்: எட்டு அடி உயர டவரில் ஏறி உலக சாதனை படைத்த இளம் யோகா சிறுவர், சிறுமியர் / Yoga Achivement / Covai கோவை சரவணம்பட்டி பகுதியில் எட்டு வயது முதல் பனிரெண்டு வயது வரையிலான ஆறு சிறுமிகள், இரண்டு சிறுவர்கள் என எட்டு பேர் இணைந்து யோகாவில் புதிய உலக சாதனை படைத்தனர்.. வெவ்வேறு சாதனைகளாக நடைபெற்ற இப்போட்டியில் சம்யுத்தா என்ற சிறுமி ஒன்றரை அடி அகலம் மற்றும் உயரம் கொண்ட கண்ணாடி தொட்டியில் லாவகமாக அமர்ந்தபடி கண்டபிடராசனா எனும் ஆசனத்தை 12 நிமிடம் 36 விநாடிகள் செய்து சாதனை படைத்தார். தொடர்ந்து சிறுமிகள் சம்ரிதா, மேகா, அக்ஷரா, வர்ஷா மற்றும் வேதா ஆகிய ஐந்து சிறுமிகள் எட்டு அடி உயர டவரின் மீது ஏறி பூமாசனம், உஷ்டா ரசனம், கோமுகாசனம், கபோடாசனம் மற்றும் வாமாதேவாசனம் என பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர். அதே போல் சிறுவர்கள் தஸ்வந்த் மற்றும் அஸ்வந்த் ஆகியோர் டவரின் மீது ஏறி பல ஆசனங்களை செய்து சாதனை படைத்தனர். சிறுவர், சிறுமிகள் என 8 பேர் இணைந்து செய்த யோகா நிகழ்வு டி.சி.பி . உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. யோகா பயிற்சியாளர்கள் ரூபிகா, பவ்யஸ்ரீ ஆகியோர் கூறுகையில் சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கிய தொடர் பயிற்சிகள் வாயிலாக இந்த சாதனையை செய்ய முடிந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து சாதனையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

ஜூன் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ