உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / பஞ்சபூதங்களில் ஆகாய ஸ்தலமாக போற்றப்படும் நடராஜர் கோயில் | Chidambaram nataraja Kovil function

பஞ்சபூதங்களில் ஆகாய ஸ்தலமாக போற்றப்படும் நடராஜர் கோயில் | Chidambaram nataraja Kovil function

பஞ்சபூதங்களில் ஆகாய ஸ்தலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாள் திருவிழாவின் 9வது நாளான நேற்று தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தேரிலிருந்து நடராஜர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகள் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டப சிற்சபையில் எழுந்தருளினர். விழாவையொட்டி இன்று காலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. நடராஜர் மற்றும் அம்பாள் நடனம் ஆடிய வழியாக கோயில் கருவறைக்கு சென்றனர். விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமியை வழிபட்டனர்.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ