மூலவர் நடராஜருக்கு 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
மூலவர் நடராஜருக்கு 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் / Chithirai Thiruvonam Natarajar Abishegam/ chidambaram சிதம்பரம் மூலவர் நடராஜர் பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மகா அபிஷேகம் செய்யப்படும். விசுவாவசு ஆண்டின் முதல் அபிஷேகமான சித்திரை திருவோண மகா அபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. கோயில் பிரகாரத்தில் வேத மந்திரம் முழங்க தீக்ஷிதர்கள் மகா ருத்ர ஹோமம் நடத்தினர். கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கன்னியா பூஜை, பிரம்மசார்ய பூஜை மற்றும் தம்பதி பூஜை செய்தனர். மேளதாளம் இசைக்க கடம் புறப்பாடானது. மூலவர் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜபெருமானுக்கு மஞ்சள், விபூதி, தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவிய அபிஷேகம் மற்றும் ஸவர்ணா அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. Byt கோயில் பொது தீஷிதர் சிதம்பரம் 04:27-05:14