ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோயிலில் பரபரப்பு | Van entered the temple | chidambaram
அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுதாகர். இவர் புதியதாக வாங்கிய சொகுசு காருக்கு பூஜை போட முடிவு செய்தார். இதற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோயிலுக்கு வந்தார். காருக்கு பூஜை போட்ட பின் காரில் புறப்பட தயாரானார். அப்போது பிரேக்கிற்கு பதில் அக்சிலேட்டரை அழுத்தியதால் கோயிலுக்குள் கார் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று கோயில் சுவற்றில் மோதி நின்றது. கோயிலுக்குள் கார் பாய்ந்து வருவதை பார்த்து பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் சுதாகர் காயமின்றி உயிர் தப்பினார். கோயிலுக்குள் புகுந்த காரை ஊழியர்கள் வெளியே இழுத்து வந்தனர். ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.