பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை | farmers request compensation | dharmapuri
தர்மபுரி அச்சில்வாடி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் நெல் வாழை கரும்பு மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் அப்பகுதியில் உள்ள கடமன் ஏரி நிரம்பியது ஏரியில் தேங்கும் வெள்ள நீரின் அளவை அதிகரிக்க PWD சார்பில் ஏரியை சுற்றி இரண்டடி உயரத்தில் கான்கிரீட் எழுப்பப்பட்டது இதனால் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவும் அதிகரித்தது வெளியேறும் நீர் விவசாய நிலத்தில் புகுந்ததால் பயிர்கள் மூழ்கியது வெளியேறும் நீரின் அளவை குறைக்க வேண்டி கலெக்டர் ஆபீஸ், PWD ஆபீஸ், BDO ஆபிஸில் விவசாயிகள் மனு அளித்தனர் ஆனால் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர் இரண்டு மாதங்களாக தேங்கி நிற்கும் நீரில் பயிர்கள் முழுவதும் அழுகியது இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் அழுகிய பயிர்களை அப்புறப்படுத்த முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர் இரண்டு மாதங்களாக தண்ணீர் வெளியேற்றப்படாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது