பெற்றோர் கடும் எதிர்ப்பு| students forced to clean restrooms in school| dharmapuri
தர்மபுரி பெருங்காடு மலை கிராமத்தில் 150 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 150 மாணவர்கள் படிக்கின்றனர் தலைமை ஆசிரியர் கலைவாணி உட்பட ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மூன்று பழங்குடியின மாணவிகளை ஆசிரியர்கள் தினமும் கழிவறை சுத்தம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது. கழிவறைக்கு தண்ணீர் நிரப்புதல், பள்ளி வளாகத்தில் குப்பை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை குழந்தைகள் தினமும் செய்துள்ளனர் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர் ஆசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் குழந்தைகளை இனி கழிவறை சுத்தம் செய்ய வைத்தால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பெற்றோர்கள் திட்டமட்டமாக தெரிவித்தனர்