கொந்தளித்த காலனி மக்கள் | Dharmapuri | Turbulent Colony
தர்மபுரி மாவட்டம் கும்மனூர் ஊராட்சி நமாண்டஅள்ளி ஆதிதிராவிடர் காலணியில் 100 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த முருகன் உள்ளார். கடந்த தேர்தலில் நமாண்டஅள்ளி காலணியை சேர்ந்தவர்கள் இவருக்கு ஓட்டு போடவில்லை என்பதால் கடந்த 4 வருடமாக காலணியை கண்டு கொள்வதில்லை. குடிநீர், சாக்கடை, கால்வாய், கழிப்பிட வளாகம் உள்ளிட்டவைகளை பராமரிக்கவில்லை. கிராம சபை கூட்டமும் நடத்தவில்லை. ரோட்டின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும், தொடக்கப்பள்ளியருகே ஆபத்தான நிலையில் உள்ள இலவம்பஞ்சு மரத்தை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையில் வைத்தும் கண்டு கொள்ளவில்லை. வாக்களிக்காததால் புறக்கணிப்பதாக காலனி மக்கள் குற்றம் சாட்டினர்.
செப் 04, 2024