உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தர்மபுரி / கம்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் போலீஸ் | Dharmapuri | VAO Arrest

கம்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் போலீஸ் | Dharmapuri | VAO Arrest

தர்மபுரி மாவட்டம் குருபரஹள்ளி கொட்டாம்புளியனூரை சேர்ந்தவர் சுதாகர். இவர் குருபரஹள்ளி விஏஓ கதிரவனிடம் நில சீர்திருத்தம் தொடர்பாக ஆவணம் பெற விண்ணப்பித்தார். கதிரவன் சான்று தர 2000 ரூபாய் லஞ்சம் கேட்டார். சுதாகர் பேரம் பேசி 1000 ரூபாய் தருவதாக ஒத்துக்கொண்டார். லஞ்சம் தருவதில் உடன்படாத சுதாகர் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பெருமாளிடம் புகார் கூறினார். போலீசார் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய நோட்டுகளை சுதாகர் இன்று மதியம் கதிரவனிடம் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக கதிரவனை பிடித்தனர். தென்கரைக்கோட்டை வருவாய் அலுவலகத்தில் அவரது கம்யூட்டரை போலீசார் ஆய்வு செய்தனர்.

மே 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை