அர்னால்டு மல்டி ஜிம் பொன்விழா கொண்டாட்டம்| Arnold Multi gym golden jubilee celebration| Dingidul
அர்னால்டு மல்டி ஜிம் பொன்விழா கொண்டாட்டம்/ Arnold Multi gym golden jubilee celebration/ Dingidul திண்டுக்கல் அர்னால்டு மல்டி ஜிம் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அமெச்சூர் மிஸ்டர் RMS ஆணழகன் போட்டி நடைபெற்றது. திண்டுக்கல், சின்னாளபட்டி, நத்தம், வேடசந்தூர் பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். 50 முதல் 80 கிலோவிற்கான எடை பிரிவில் சப் ஜூனியர், ஜூனியர், ஜூனியர் சீனியர், மாஸ்டர் என பல பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. உடல் கூறு, உடல் அமைப்பு, தசை அமைப்பு பின்னணியில் மதிப்பெண் வழங்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பரிசு அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக 1500 ரூபாய் தங்கப்பதக்கம், இரண்டாம் பரிசாக ஆயிரம் ரூபாய் வெள்ளி கேடயம், மற்றும் மூன்றாம் பரிசாக 500 ரூபாய் மற்றும் வெண்கல கேடயம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற போட்டியாளர்கள் ஒன்றிணைந்து பங்கேற்ற இறுதிகட்ட ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் ப்ரோ ஜான் பிட்னஸ் ஜிம்மை சேர்ந்த விவேக் முதல் பரிசை வென்று ஆணழகன் பட்டம் பெற்றார். ஒட்டுமொத்த இறுதி கட்ட ஆணழகன் போட்டியில் முதல் பரிசு ஐம்பதாயிரம், இரண்டாம் பரிசு 30000 மற்றும் மூன்றாம் பரிசு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் 91 புள்ளிகளுடன் அர்னால்டு மல்டி ஜிம், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திண்டுக்கல் எஸ்பி கார்த்திக் பரிசு வழங்கி கௌரவித்தார். விழாவில் தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க நடுவர்கள், ஜிம் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.