உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / கோர்ட் புறக்கணிப்பு செய்த வழக்கறிஞர்கள் | Dindigul | Police investigating bomb attack at lawyer's

கோர்ட் புறக்கணிப்பு செய்த வழக்கறிஞர்கள் | Dindigul | Police investigating bomb attack at lawyer's

கோர்ட் புறக்கணிப்பு செய்த வழக்கறிஞர்கள் | Dindigul | Police investigating bomb attack at lawyers house திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ஜல்லிபட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம். இவரது வீட்டில் கடந்த ஞாயிறு அதிகாலை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால் முத்துராமலிங்கம் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தனர். மர்ம நபர்கள் இருவர் டூவீலரில் தப்பி சென்றனர். முத்துராமலிங்கம் அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் கூறினார். போலீசார் வெடிகுண்டு துகள்களின் மாதிரிகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க செயலாளர் உதயகுமார் கண்டனம் தெரிவித்தார். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பிப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை