கோடை விடுமுறை கூட்டத்தை சமாளிக்க டூரிஸ்ட்டுகளுக்கு நேரம் நீட்டிப்பு
/ Kodaikanal / Time extension for tourists to visit Bryant Park கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா காலை 9 மணிக்கு திறக்கப்படும். மாலை 6 மணிக்கு அடைக்கப்படும். கோடை விடுமுறையால் பல மாநிலங்களில் இருந்து வரும் டூரிஸ்ட்டுகள் கோகர்ஸ்வாக், பசுமை பள்ளத்தாக்கு, பில்லர் ராக், குணாகுகை, பைன் மரக்காடுகள், ஏரி உள்ளிட்ட பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு இறுதியாக பிரயன்ட் பூங்கா வருகின்றனர். பூங்காவை அடைக்கும் நேரத்தில் வருவதால் போதிய நேரம் கிடைக்காமல் பூங்கா அழகை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு பிரையன்ட் பூங்கா அடைக்கும் நேரம் மாலை 6 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் கூடுதல் அனுமதி வழங்கி இரவு 7 மணிக்கு அடைக்க சுற்றுலாத்துறை உத்தரவிட்டுள்ளது. பூங்காவின் பல வண்ண விளக்குகள் இரவு 7 மணி வரை ஜொலிக்கும். மின்னொளி அழகில் பூங்காவின் வண்ண வண்ண மலர்களை டூரிஸ்ட்டுகள் கண்டு ரசிக்கின்றனர்.