தமிழக சட்டசபை மதிப்பீட்டு குழு வருகை எதிரோலி
தமிழக சட்டசபை மதிப்பீட்டு குழு வருகை எதிரோலி | Kodaikanal | Bumpy roads | Assembly Evaluation Committee Visit கொடைக்கானலில் தமிழக சட்டசபை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் காந்திராஜன் தலைமையில் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு நடத்த வந்தனர். கொடைக்கானல் காய்கறி சந்தை, அரசு ஹாஸ்பிடல், பிரதான ஏரி, அப்சர்வேட்டரி ரோஜா பூங்கா, மனோரஞ்சிதம் அணை, பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில் மற்றும் மன்னவனூர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். குண்டும், குழியுமான ரோடுகளில் ஏற்பட்ட மரண குழிகளை அவசர கதியில் சிமென்ட் மற்றும் ஜல்லி கற்களை கொட்டி தற்காலிமாக மூடினர். டூரிஸ்ட்கள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான ரோடுகளில் அமைச்சர்கள், சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் வந்தால் தான் அப்சர்வேட்டரி ரோட்டிற்கு விடிவு காலம் பிறக்கும் என பொதுமக்கள் வேதனை தெரிவி்த்தனர்.