உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரபணு மாற்றப்பட்ட சீனா பூண்டு | Chiness garlic sales in Dindigul

உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரபணு மாற்றப்பட்ட சீனா பூண்டு | Chiness garlic sales in Dindigul

சீனாவில் மரபணு மாற்றப்பட்ட வெள்ளைப் பூண்டுகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றை சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்தியாவில் சீனா பூண்டுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சீனா பூண்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான குழுவினர் மேற்கு ரத வீதி, கச்சேரி தெரு, பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூண்டு கடைகளில் சோதனை மேற்கொண்டனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், மரபணு மாற்றப்பட்ட சீன பூண்டுகளை சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை எந்த பகுதிகளிலும் சீன பூண்டுகள் தென்படவில்லை. கடைகளிலும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ