/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் பரிசுகள் ரெடி | Dinamalar Vazhikatti | Dindigul
மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் பரிசுகள் ரெடி | Dinamalar Vazhikatti | Dindigul
பிளஸ்1, பிளஸ் 2க்கு பின் உயர் கல்வியில் என்ன படிப்புகளை தேர்வு செய்யலாம். எங்கு படிக்கலாம். எதிர்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை என பயனுள்ள கல்வி ஆவோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் நாளிதழ் மற்றும் கோவை கிருஷ்ணா ஸ்ரீ கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே. மகாலில் இன்று கோலாகலமாக துவங்கியது. கருத்தரங்கை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பழனியம்மாள் துவக்கி வைத்தார். கருத்தரங்கு வளாகத்தில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என 40க்கும் மேற் பட்ட கல்வி நிறுவனங்களில் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
மார் 30, 2024