உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் உள்ளிட்ட பரிசுகள் ரெடி | Dinamalar Vazhikatti | Dindigul

மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் உள்ளிட்ட பரிசுகள் ரெடி | Dinamalar Vazhikatti | Dindigul

பிளஸ்1, பிளஸ் 2க்கு பின் உயர் கல்வியில் என்ன படிப்புகளை தேர்வு செய்யலாம். எங்கு படிக்கலாம். எதிர்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை என பயனுள்ள கல்வி ஆவோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் நாளிதழ் மற்றும் கோவை கிருஷ்ணா ஸ்ரீ கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி திண்டுக்கல் தாடிக் கொம்பு ரோடு பி.வி.கே.. மகாலில் இன்று கோலாகலமாக துவங்கியது. ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பழனியம்மாள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என 40க்கும் மேற் பட்ட கல்வி நிறுவனங்களில் அரங்குகள் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா விஷ்வ வித்யாலயம், ராஜலட் சுமி இவ்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்குகிறது. இந்நிகழ்ச்சி நாளை நிறைவடைகிறது. அனுமதி இலவசம். காலை, மாலை என இரண்டு அமர்வுகளாக நடக்கும் கருத்தரங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது. தினமலர் வழிகாட்டி கல்வி திருவிழாவையொட்டி திண்டுக்கல் விழாக்கோலம் பூண்டது.

மார் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !