பெண் உட்பட 7 பேர் மீது வழக்கு, இருவர் கைது
பெண் உட்பட 7 பேர் மீது வழக்கு, இருவர் கைது | Dindigul | A gang attacked and ransacked the shop of a DMK functionary. திண்டுக்கல் காமராஜர் பஸ் ஸ்டாண்ட் காரைக்குடி நிறுத்தம் அருகே பிராங்கிளின் என்பவர் பல்பொருள் விற்பனை கடை வைத்துள்ளார். இவர் திமுக இளைஞரணி கிழக்கு பகுதி செயலாளராக உள்ளார். இன்று திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே டீ கடை வைத்துள்ள நந்தா என்பவர் கடைக்கு தேவையான பொருட்களை வாங்க பஸ் ஸ்டாண்ட் அருகே வந்த போது நந்தா டூவீலர் மீது மோதும்படி பிராங்கிளின் சென்றதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாகி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த நந்தா தனது குடும்பத்தாரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். ஆத்திரமடைந்த நந்தாவின் உறவினர்கள் பிராங்கிளின் கடையை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். பஸ் ஸ்டாண்டில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 2 பேர் திண்டுக்கல் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் ஆகினர். திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் இரு தரப்பினரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் மனு அளித்தனர். போலீசார் நந்தகோபால், சிவக்குமார், மகேஸ்வரி, ஹரிஹரன் உள்ளிட்ட பெண்கள் உள்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். திமுக இளைஞரணி கிழக்கு மாவட்ட செயலாளர் பிராங்கிளின் மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.