உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / விண்ணை பிளந்த அரோகரா கோஷம் | Flag hoisting of Palani thaipusam

விண்ணை பிளந்த அரோகரா கோஷம் | Flag hoisting of Palani thaipusam

பழநி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இதையொட்டி கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் உள்ள கொடிகட்டி மண்டப கொடிமரத்தில் நிலா, சூரியன், வேல், மயில் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது. விழாவில் அறங்காவலர்கள், இணை கமிஷனர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் பிப்ரவரி 10ம் தேதி நடக்கிறது. அன்று இரவு வெள்ளித் தேரோட்டம் நடைபெறும். ஏழாம் நாள் திருவிழாவான பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ