/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ பயணம் செய்த மாணவிகள் அச்சம் | The rear staircase of the government bus collapsed
பயணம் செய்த மாணவிகள் அச்சம் | The rear staircase of the government bus collapsed
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து கல்லுப்பட்டி செல்லும் அரசு பஸ் , வேடசந்தூர் பஸ் நிலையத்திற்குள் இன்று காலை வந்தது. பேருந்துக்குள் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது திடீரென பஸ்ஸின் பின்பக்க படிக்கட்டு உடைந்து விழுந்தது. பஸ்ஸில் பயணம் செய்த மக்கள் மற்றும் மாணவிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். பஸ் டிரைவரும் கண்டக்டரும் பயணிகளை இறக்கி விட்டு பஸ்ஸை டெப்போவிற்கு எடுத்து சென்றனர்.
செப் 24, 2024