/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் | Dindigul | Seized car and Gutka
மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் | Dindigul | Seized car and Gutka
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் - கரூர் நான்கு வழிச்சாலையில் ஹைவே பேட்ரோல் போலீசார் ரோந்து சென்றனர். நாகம்பட்டி அருகே ரோட்டோரம் கார் நின்றது. போலீசார் காரை நோக்கி சென்றனர். போலீசார் வருவதை பார்த்து காரில் இருந்தவர்கள் எஸ்கேப் ஆகினர். பூட்டப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்தனர். காருக்குள் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி இருப்பதை கண்டனர். இதையடுத்து கிரேன் உதவியுடன் காரை வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷக்கு கொண்டு சென்றனர். விசாரணை நடக்கிறது.
பிப் 02, 2024