உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / டூரிஸ்ட்கள் வாடகை வாகனங்கள் கிடைக்காமல் அவதி | Kodaikanal

டூரிஸ்ட்கள் வாடகை வாகனங்கள் கிடைக்காமல் அவதி | Kodaikanal

டூரிஸ்ட்கள் வாடகை வாகனங்கள் கிடைக்காமல் அவதி | Kodaikanal | Tourist vehicle drivers strike in Kodaikanal கொடைக்கானலில் கடந்த ஜனவரி 12ம் தேதி முதல் டூரிஸ்ட் ஸ்பாட்டிற்கு செல்லும் வாடகை வாகனங்களுக்கு பசுமைப் பள்ளத்தாக்கு செக்போஸ்ட் அருகே க்யூ ஆர் கோடு மூலம் தலா 30 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறையால் விடுமுறை நாட்களில் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நான்கு கிலோ மீட்டர் துாரம் வரை வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. இதனால் டூரிஸ்டுகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுகி்ன்றனர். பல மணி நேரம் காத்திருப்பதால் டூரிஸ்ட்டுகள் குடிநீர் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். இயற்கை உபாதைகளுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பழைய முறைப்படி அனைத்து வனத்துறை டூரிஸ்ட் ஸ்பாட்டிற்கும் அந்தந்த இடத்திலேயே தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கொடைக்கானலில் அனைத்து டூரிஸ்ட் வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாகனங்களை இயக்காமல் பஸ் ஸ்டாண்டில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொடைக்கானல் வந்த டூரிஸ்ட்கள் வாடகை வாகனங்கள் கிடைக்காமல் அவதி அடைந்தனர். ஸ்பாட்டிற்கு விரைந்த டிஆர்ஓ கீர்த்தனா மணி, தாசில்தார் பாபு, வனத்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து 5 நாட்களுக்குள் வனத்துறை டூரிஸ்ட் ஸ்பாட்டுகளில் தனித்தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, வாகன டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாலை 6 மணிக்கு மேல் வாடகை வாகனங்களை இயக்கினர்.

ஏப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி